எமக்கும் ஒரு காலம் வாரும்

எமக்கும் ஒரு காலம் வாரும்
Spread the love

எமக்கும் ஒரு காலம் வாரும்

தேசம் விடியும் என்றே
தெரு விளக்கு எரிகிறது
காத்திருப்பு தேவை என்பதால்
கண்ணீர் சொரிகிறது

அடங்கி போவதற்கா – தமிழ்
அக்கினியாய் கொதித்தது
ஏறி மிதிப்பதற்கா
செருப்பிங்கு பிறந்தது

வாடி போவதற்கா
வயலில் நெல் விளைந்தது
கழுத்தறுத்து வீழ்வதற்கா
கதிர் மணி தொங்கியது

ஏர் பிடித்து நடந்தவர்
எல்லை இழந்ததால்
கூழ் குடித்து பதுங்கியவர்
குதுகளித்து மகிழ்கிறார்

நாவடக்கி திரிந்தவர்
நக்கல் கதை உரைக்கின்றார்
நாளை ஒரு காலம்
நமக்கும் பிறக்கும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 16-05-2024