எப்படி ஆறும் இத்துயர்

எப்படி ஆறும் இத்துயர்
Spread the love

எப்படி ஆறும் இத்துயர்

வீரம் விளைந்த மண் எங்கே
விதையான வேர் எங்கே
ஆழ கடலோடிய கலமெங்கே
ஆகாய வான் எங்கே

ஓயாது ஒலித்த குரல் எங்கே
ஓயாத அலை களமெங்கே
இரவெல்லாம் விழித்த
இன காவல் எங்கே

எல்லாம் இழந்து எங்கள் தேசம்
ஏனோ இப்படி கிடக்கிறது
எவர் என்ன கேட்பார்
எவர் என்ன சொல்வார்

சொல்ல மறந்த கதைகள்
சொல்லாமல் உறங்க
சொல்லி அழ முடியா
சொந்தங்கள் தவிக்க

நடை பிணமாய் உடல்
நாதியற்று நடக்கிறது
அழுவதால் பயனில்லை
ஆனாலும் வலிக்கிறது

எழுத முடியா பேனைகளும்
எடுத்துரைக்க முடியா வாய்களும்
மவுனம் ஆனதால்
மாயங்கள் நடக்கிறது …..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024