என் தோழிக்கு இன்று பிறந்த நாள்
அன்புக்கும் பண்புக்கும் முதலானவள்
அற நெறி போதனை தாயானவள்
வில்லுக்கும் அம்புக்கும் இலக்கானவள்
விடுதலை வேட்கையின் கூரானவள்
சொல்லுக்கும் மொழிக்கும் உயிரானவள்
சொன்னதை செய்கின்ற பொருளானவள்
கல்விக்கு ஆசானாய் மலர்கின்றவள்
கார்த்திகை தீபமாய் எரிகின்றவள்
நெஞ்சுக்கு நெருக்கமாய் நிற்கின்றவள்
நேயத்தை பாடி நடக்கின்றவள்
அன்றெங்கள் பள்ளியில் கற்றவள்
ஆருயிர் தோழியானவள்
இடரா இன்றும் தொடர்பவள்
இதயம் மகிழ மொழிபவள்
அகவை உந்தன் நாளிலே
ஆர தொழுது வாழ்த்துகிறேன் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-12-2023
என்னோடு கல்வி கற்று ஆசிரியராக பணிபுரியும் தோழி சத்திய கலா அகவை நாளில் அவரை எண்ணி வடித்த வாழ்த்து பா ..!