என் செய்வேன்

என் செய்வேன்
Spread the love

என் செய்வேன்

தொட்டு பேசிட வந்தால்
தொட முன் ஏன் முறைக்கின்றாய்
கட்டு கடங்கா காதலித்தால்
காதலை ஏன் வெறுக்கின்றாய்

முட்டி பேசிட வந்தால்
முன்னே வர மறுக்கின்றாய்
விட்டு விலகிட நினைத்தால்
விழுந்தேன் அழுகின்றாய்

தட்டி தழுவும் மழை துளியாய்
தரையில் ஏன் விழுகின்றாய்
கட்டி தழுவிட நினைத்தால்
கத்தி ஏன் முறைக்கின்றாய்

கட்டி தாலி தொழுதுவிடு
கரம் கூப்பி வேண்டுகிறாய்
இப்படி என்னை தண்டித்தால்
இதயமே என் செய்வேன் ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-06-2024