என்னோடு வா

Spread the love

என்னோடு வா

விட்டுப்போன உறவென்று- உனை
விட்டு விட முடியவில்லை
தொட்டு பார்க்கும் எண்ணத்தால்- உனை
தொலைத்து விட இயலவில்லை

கட்டி வைத்த மாலையாக
காய்கின்ற பேரழகே….
உனை கொய்தவனை கொன்றிடவா..?
உன் உயிரை காத்திடவா?

மண்ணுக்குள் வேரெடுத்து
மழை நீரில் குளியலிட்டு….
விண்ணுலகை பார்த்தவளே
வீழ்ந்ததின்று எப்படியோ?

நிமிடம் ஒன்று சிந்திக்க
நினைவிழந்து போனதினால்
சுனாமி அலைக்குள்ளே
சுயம் வரத்தில் வீழ்ந்தாயோ ..?

அலை கடந்து வீடுடைத்த
ஆழி பேரலையாய்
மீதி வாழ்வுக்குள்
மிதந்து போராயோ …?

ஓயாது பெருக்கெடுக்கும்
ஒப்பாரி கண்ணீரை
தடுத்திடுவேன் வந்து விடு
தங்கமே நம்பி விடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 13-08-2021
http://ethirinews.com/

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply