என்னோடு வாழ்ந்திட வா ….!
அலைபோல மனதாட
அதில் வந்து நீ கூட …
உன்னை மனம் தேடுதே
உறவாட வாடுதே ….
மஞ்சள் வெய்யில் ஆனவளே
மாரி குளிர் போன்றவளே ….
உன் பிரிவு வாட்டுதே
உருகி விழி கொட்டுதே …..
நீ சொன்ன வார்த்தைகளோ
நினைவில் ஓடி வர …
தன்னம் தனி தவிக்கிறேனே
தாமைரையா ஆடுறனே ….
உன்னை காணும் நாள்
ஊறி வருமோ ..?
ஊன்றி எழும் காலம்
ஊர் கூடி வருமோ …?
தூது வந்த காற்று
சேதி சொல்லுதே – நீ
தூங்கவில்லை என்று
தூது சொல்லுதே ….
கவலை என்ன மானே
கண்கள் துடைப்பாய் ….
கட்டி தழுவும் நேரம்
கண்ணால் சிரிப்பாய் ….
தோளில் மாலை சூடி
தேரில் வருவோம் ….
தென்றலுடன் கூடி
தேறி எழுவோம் ….
ஒன்று படு மானே
வென்று நிமிர் தேனே …
கன்றுடனே நாமே
காலமதை ஆள்வோம் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/08/2019