என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்
என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம் ,நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் சதிகளை மேற்கொண்டாலும் பலனில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று சஜித் பிரேமதாசவின் வெற்றியை எல்லா முடிச்சுகளையும் போட்டு தடுப்பதுதான் அந்த அரசியல்வாதிகளின் ஒரே இலக்கு.
சாத்தியமான அனைத்து சதிகளும் செய்யப்படுகின்றன.
ஆனால் அவர்கள் இருவரும் ராஜபக்சக்களின் முன்னாள் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இருவரும் ராஜபக்சேவுடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
நினைவில் கொள்ளுங்கள், நாட்டை வங்குரோத்து செய்த குழுவோடு என்றும் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையாது.
எனவே, 21 ஆம் திகதி, உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்கு ஒரு முற்போக்கான திருப்புமுனைக்கு முன்முயற்சி எடுப்போம்” என்றார்.