என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!
கூண்டில் அடைத்து சிரிக்கும் மனிதா
கூண்டை திறந்து மகிழ்வாய் …
வாழும் எந்தன் வாழ்வை ஏனோ
வாடும் சிறையில் அடைத்தாய் ….?
நீதி பேசும் மாந்தன் என்றால்
நீதி கூறி நிற்பாய் ..?
நீ பெற்ற பிள்ளை ஒன்றை
நீயா வைப்பாய் கூண்டில் ..?
சிறகை வெட்டி வைத்தால் நானும்
சிரித்தே உலவி திரிவேன் ….
சிறகு அடிக்க முடியா கூண்டில்
சிறையில் வைத்தாய் பாவம் …
நாளும் வடியும் எந்த கண்ணீர்
நல்ல வாழ்வு தருமா ..?
பிள்ளை என்று பிரியம் கொட்டும்
பிரியமானீர் சொல்வீரோ …?
இறந்த பின்னர் என்னை எண்ணி
இதயம் கலங்கி அழுகாதே …
இதயம் இல்லா நீவீர் எல்லாம்
இருந்தா அழுவீர் மறக்காதே ….!
வண்ணை மைந்தன் (ஜெகன் )
ஆக்கம்-03/09/2017
அன்பு தோழி ரேணுகா வீட்டில் கிளி ஒன்று சிறை பட்ட போது….