எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா
Spread the love

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா

எனது கடவுள் என் மக்கள் அர்ச்சுனா ,கடவுளை நம்பவில்லை ஆனால்
எவன் ஒருவன் தமிழின வேட்கையில் தன்னை ஆகுதியாகி கொண்டானோ அவனின் ஆன்மா சாந்தி அடையாமல் எம்மை சுற்றி கொண்டிருக்கின்றது என்பதை இன்றுடன் நம்புகிறேன்.


முதலில் வழக்கு கூறப்பட்டு பின்பு திருப்பி எடுக்கப்படும் என சொன்னபோது ஒரு மணித்தியால இடைவெளி இருந்தது..
அந்த ஒரு மணித்தியால இடைவெளியில் தான் அந்த கடிதம் என் கைக்கு வந்து சேர்ந்தது…


எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது என்னுடன் தொலைபேசியில் கதைத்தவர்கள் அவற்றை எல்லாம் அனுப்பி வைப்பார்கள் என்று..
ஐயா..


உங்கள் ஊர் தெரியாது பெயர் தெரியாது..
உங்கள் கால்களுக்கு என் கைகளால் கரம் கூப்பி தொழுகின்றேன்..
நீங்கள் அந்தக் கடிதத்தை இன்று எனக்கு அனுப்பி வைத்திருக்காவிடில்..
இன்றும் குற்றவாளிகள் கூட்டில் குற்றவாளியாகவே நின்றிருப்பேன்..


தாங்கள் தொலைபேசியில் அழைத்து கதைத்த போது நான் அவற்றை பெரிது படுத்தவில்லை..


ஏனெனில் இவை எல்லாம் எல்லாருக்கும் தெரிந்த பொது விடயங்கள்..
ஆதலால் நான் நடவடிக்கை எடுத்தேன் ஆனால் ஆதாரங்களை சேர்க்கத் தோணவில்லை..


அவர்களே தன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு இப்போது கட்டாயம் சமாதானத்திற்கு வருவார்கள்..


இறந்து போன அந்த உடலங்கள் குளிர அறைகளில் அழுது கொண்டிருந்தது கடவுளுக்கு கேட்டிருக்கிறது..
இல்லை இல்லை..


எங்கள் கடவுளர்களுக்கு கேட்டிருக்கிறது..
மாவீரர்கள் கடவுள் அல்ல..


அவர்கள் இந்த மண்ணுக்கு கொடுத்தது உயிரை அல்ல..
ஏதோ ஒரு வகையில் ஒரு மாவீரனின் பிள்ளை என்ற விதத்தில் நானும் அவர்களுக்கான நீதியின் தேடலில் உங்களுடன் இணைந்து இருக்கிறேன்..
என்றோ ஒரு நாள்..


எமக்காக தங்களது உயிர்களை எவரவர் ஆகுதியாக்கி கொண்டார்களோ..
அவர்களின் ஆன்மாக்களுக்கு நான் பதில் சொல்லியே ஆகுவேன்..
அதுவரை..தமிழால் ஒன்றிணைவோம்..இவ்வாறு அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுளளார் .