எடுத்து வா ஏகே 47….!

Spread the love

எடுத்து வா ஏகே 47….!

ஆடி வந்த புயலடித்து
அழகு வீடுடைந்து – குஞ்சி
எட்டு முழ சேலையும்
எட்டா கிழிஞ்சு போச்சு ….

மாரி மழைக்குள்ள
மானம் காத்த வீடு …
வெள்ளைத்தோட போச்சு
வெம்பி விழி யாச்சு ….

கத்தி அழுதோம்
கண்ணீர் விட்டோம்
கும்பிடு போட்டு – கட்சி முன்
குந்தி இருந்தோம் ….

ஏதும் தரவில்லை
எங்களை பார்க்கவில்லை …
வெள்ளை வேட்டிகளையும்
வேலியில காணவில்லை ….

குண்டி கழுவி
குடியாட்சி தழுவி
முந்தி நின்று
முன் வரிசையில் கும்மாளம் …

எல்லை பிடிச்சவனும்
எலி பிடிச்சவனும்
கட்சி தலைவராம்
காசில படுக்கிறாங்கள் ….

அடைவு வைத்து
அன்றாடம் கழித்தவர்கள் …
அரசியல் ஏறி
ஆடி கார்ல போறாங்கள் …..

தேர்தல் வந்ததும்
தெருவிறங்கி கூவி
வாக்கு கேட்பார்கள்
வாய்க்கரிசி போடுவார்கள் …

தலைவன் வளர்த்த
தமிழ் தேசிய கட்சி
சிங்கள வால்பிடித்து
சிலுக்காக ஆடுதப்பா

கட்டு துவக்கு ஒண்ணு
கண் பார்த்து குறிவைக்க …
வெள்ளை வேட்டிகளை
வெறியோட தொலைக்கவேணும்

குண்டி கிழிஞ்ச காட்சட்டை
குறுக்கால போட்டவர்கள் ….
ஆடி கார்ல போகும்
அரசியலை பாரும் ….

ஏகே தான் வேணும்
எடுத்து வா தம்பி …
போட்டு தள்ள
பொட்டம்மானை கூப்பிடு …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/06/2019

      Leave a Reply