எங்கள் அவலம் இன்று புரிகிறதா

எங்கள் அவலம் இன்று புரிகிறதா

ஆகாயம் ஆடிடும் அழகான நாடு
அதோபார் அந்தோபார் அசிங்கத்தின் கேடு
அடித்த கொள்ளையில் அரைவாசி கொட்டு
அன்றாட அவமானம் அதனை ஒட்டு

எரிபொருள் எங்கென்ற ஏக்கம் போக்கு
எந்நாளும் ஏறும் விலை ஏற்றம் நீக்கு
பட்டினி படரா பாதையை காட்டு
பகைவராய் பார்க்கும் பார்வையை ஒட்டு

இல்லாத இழிநிலை இன்றே ஒட்டு
இலங்கை இருக்கென்று இவ்வுலகில் காட்டு
நாட்டுக்குள் நாட்டை நாட்டியே காட்டு
நம்மவர் வாழும் வாழ்வியல் கூட்டு

ஓட்டுக்கு ஓடும் ஓலம் ஒட்டு
ஒன்றாகும் ஓர்மத்தின் ஓட்டை நாடு
இல்லாமல் தவிக்குது இலங்கையில் வீடு
இதுதானே இதுதானே இலங்கையில் கேடு

சிங்களநாடு சிறையிலே சிறையிலே
சிறுபான்மை கண்டது இவையாவும் போரிலே
இல்லாத நிலையிலே இன்றிந்த போராட்டம்
இனத்தமிழ் அழித்தாயே இதனாலே வாட்டம் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 23-09-2022

Leave a Reply