உயிர் போச்சு அர்ச்சுனா கவலை
உயிர் போச்சு அர்ச்சுனா கவலை ,சாவகச்சேரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய மூவரில் ஒருவர் பலியாகியுள்ளார் என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் காணொளி வெளியிட்டுள்ளார் .
கீழ்வருமாறு வர முகநூலில் குறிப்பிட்டுள்ளார் .
இந்த வீடியோ தற்போது எனக்கு பகிரப்பட்டுள்ளது.
இது மிகவும் கவலையான விடயம்.
இதற்காகத்தான் மக்கள் போக வேண்டாம் என்று சொன்னபோது நான் இல்லை நான் போகின்றேன் போய் கதைத்து விட்டு வருகிறேன் என பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு நான் வைத்தியசாலை விட்டு வெளியே போய் ,
இன்று வரை ஆரம்பகட்ட விசாரணை முடிக்காது இருந்தும் என்னுடைய சம்பளம் தரப்படாமல் இருந்தும் நான் மக்களுக்காக அமைதியாக இருக்கிறேன்.
அந்த வைத்தியசாலை ஆனது ஏற்கனவே இருக்கின்ற பழைய ஒப்பிடி பில்டிங் ஆனது மிகவும் சிறியதாகும்.
ஒரே தடவையில் ஒரு பஸ்ஸோ அல்லது ஒரு ட்ரெயின் பிரண்டு நோயாளர்கள் வந்தால் ஒரு நாளும் அதில் நோயாளர் தரம் பிடித்தல் கூட பண்ண முடியாது.
அந்தப் பழைய ஒப்பிடி பில்டிங் அதிதீவிர சிகிச்சை பிரிவினர் மூன்று கட்டில்கள் மாத்திரமே போடலாம்.
அது தவிர அங்கே வேலை செய்கின்ற கனிஷ்கர் தர ஊழியர்கள் அனைவரும் பெண்கள் ஆவர்.
திட்டமிட்ட ரீதியில் வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா அவர்கள் எங்களுடைய வைத்தியசாலையில் இருந்த ஆண் ஊழியர்கள் அனைவரையுமே பருத்தி துறை வைத்தியசாலைக்கு மாற்றினார்.
இவற்றையெல்லாம் நான் கேட்டபோது என்னுடைய என்னை குற்றவாளியாக்கி எல்லா வைத்தியர்களும் திட்டமிட்ட ரீதியில் மனவிரக்திக்கு உள்ளாக்கப்பட்டு அர்ச்சுனாவை
திறத்தினால் எல்லாம் சரியாகும் என வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா அவர்கள் 25 வைத்தியர்களையும் கொண்டு போய் தனது ஆபிஸில் வைத்து ஸ்ட்ரைக் பண்ணினார்.
எல்லாவற்றையும் நான் பொறுமையாக கேட்டு கொண்டேன்.
நானே சொன்னேன் நானே போகிறேன் என்று.
இப்போது இவ்வாறான ஒரு நிகழ்வானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
வைத்தியசாலை நிர்வாகம் தெரியாத யாரும் வைத்தியசாலை நிர்வாகம் செய்யக்கூடாது என 2021 ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவித்தல் கூட உள்ளது நான் அவற்றையும் வெளியிடுகிறேன்.
ஏனோ தெரியவில்லை மனம் கனக்கிறது.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. என அவர் மனம் குமுறி இந்த விபத்து மரணம் காயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்
- அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
- வீரசிங்கம் மகாலிங்கம் மரண அறிவித்தல்
- சீமான் அர்ச்சுனா மோதல்
- மாலைதீவில் தீவு வங்கிய புலிகள்
- அச்சுறுத்திய அநுரகுமார மன்னிப்பு கோர வேண்டும்
- மனைவியை கொன்று உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்
- அன்று கோட்டாவுடன் டீல் இன்று அநுரவுடன் டீல்
- திடீரென மாவையை சந்தித்த ஜனாதிபதி ரணில்
- 34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
- திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்