உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

Spread the love

உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

முருகன் அருளால் உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிர் தப்பியது பற்றி குஷ்பு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடலூர் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றபோது எனது கார் மீது கண்டெய்னர் லாரி மோதியது.

இந்த விபத்தில் எனது கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. முருகன் அருளால்தான் நான் உயிர் பிழைத்து உள்ளேன். எனது கணவர்

வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் என்னை காப்பாற்றி உள்ளது.

அந்த முருகனே என்னை வேல் யாத்திரைக்கு வரச் சொல்லி அழைத்து உள்ளது போலவே உணர்கிறேன். எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

விபத்து நடந்த போதிலும் வேல் யாத்திரையில் திட்டமிட்டபடி நான் கலந்து கொள்கிறேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

Leave a Reply