உன் இதயத்தை எனக்கு தா

உன் இதயத்தை எனக்கு தா
Spread the love

உன் இதயத்தை எனக்கு தா

உன்னை தாங்கும் என் இதயம்
உனக்காய் தானே துடிக்கிறதே
கண்ணில் வடியும் நீர் துளியில்
கண்ணே காதல் தெரிகிறதே

மெல்ல பேசும் உன் மொழியில்
மேன்மை நன்றே தெரிகிறதே
மெலிந்த மேனி உன் அழகை
மெய்யாய் விழியும் ரசிக்கிறதே

கரும்பாய் இனிக்கும் உன் பேச்சை
காது கேட்க துடிக்கிறதே
கல்லறை சாயும் காலம் வரை – உன்
காலடி இருக்க பிடிக்கிறதே

நீளும் இந்த இரவுக்குள்ளே
நியத்தை நாங்கள் தொலைப்போமா
மீளா துடிக்கும் ஆசைகளை
மீள சுழற்சி செய்வோமா

உன் பதில் என்ன கூறாயோ
உன் உரிமம் எனக்கு தாராயோ
இன்றேனும் ஒரு நொடி ஏற்காயா
இதயத்தை எனக்கு தருவாயா ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-03-2024