உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
Spread the love

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

நிலவே நிலவே நீ எங்கே
நினைவுகள் மட்டும் ஏன் இங்கே
ஏக்கத்துடன் நான் தவிக்க
ஏங்க வைத்து போனதெங்கே

அந்தி வரும் பொழுதில்
ஆகாயம் தேடுகிறேன்
ஆதரவு இல்லா
அன்பே வாடுகிறேன்

தன்னம் தனி வாடையிலே
தாகம் தவிக்கிறது
தாராளம் செய்தாய் அன்று
தவறிழைத்தேன் நான் இன்று

ஓடும் நதியில் ஆடும் படகாய்
ஓடினாயே அன்று
ஓடி ஆடும் அலையில்
ஓங்கி அடி வாங்கினாயே நன்று

வலி வாங்கி அமைதி கொண்டாய்
வாழ்வின் வழி தெரிந்து நின்றாய்
உன்னை புரியா தவறிழைத்தேன்
உன்னாலே இன்று ஊமை ஆனேன்

படிக்கும் போது தானே பிடிக்கிறதே
பக்குவம் அதில் தானே முளைக்கிறதே
காலம் கடந்து தெளிதல் பிழைதானே
கண்ணீர் வடிக்கிறேன் உனக்காய் நானே ,

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2024