உன்னிடம் சரணடைந்தேன் ….!

Spread the love

உன்னிடம் சரணடைந்தேன் ….!

தூக்கம் தொலைத்த இரவுகளில்
துணையாய் பேசி நின்றவளே …
ஏங்க வைத்து ஏன் சென்றாய் …?
எங்கோ இப்போ நீ சொல்வாய் …?

கோடை வெயில் தீயாகி
கொதிக்க வைத்து ஏன் போனாய் ..?
மாரி மழையை கூட்டி வந்து
மனதை தடவி போகாயோ…?

பேசும் நாட்கள் சிலதாச்சு – நீ
பேசாதிருப்பது ஏனாச்சு ..?
தலையை ஆட்டி பதில் சொல்லும்
தந்திரம் எங்கு கற்றாயோ ..?

பக்கம் வந்து குந்தையிலே
பரவசமாகி மனம் துடிக்க …
வெட்க பட்டு நீ இருக்கும்
வேளை தன்னை இரசிக்கின்றேன் …

ஒற்றை கையால் தலை கோதி
ஒத்தி ஒத்தி தடவையிலே …
முழுவதும் உன்னில் வசபட்டேன்
முட்டியிட்டு நான் கிடந்தேன் …!

வன்னிமைந்தன் (ஜெகன் )
அக்கம் -01/08/2017

Home » Welcome to ethiri .com » உன்னிடம் சரணடைந்தேன் ….!

    Leave a Reply