உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்
Spread the love

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

உன்னால் துடிக்கிறோம்

துயர் தந்து விழி மூடி எங்கோடினாய் – விழி
துளியாலே நனைந்திட ஏன் வாடினாய்
அன்புக்கும் பண்புக்கும் முதலாகினாய்
அறத்திலே நீயோர் தாயாகினாய்

அன்பிலே நனைகின்ற சேயாகினாய்
அறத்திலே விளைகின்ற பயிராகினாய்
போதனை பொழிகின்ற அருவியானாய்
பொறுமைக்குள் உறைகின்ற பெருமையனாய்

கண்ணுக்குள் ஒளிர்கின்ற ஒளியுமானாய்
கருணையில் நீயோர் தெய்வமானாய்
பெருமைக்கும் உரிமைக்கும் நீயே ஆனாய்
பேறுகள் பேசும் நூலே ஆனாய்

உனக்குள்ளே எத்தனை ஆற்றல் கண்டேன்
உன் சுயசரிதை நூலால் நானே மிரண்டேன்
வழிகளை சொல்கின்ற துணிவு கொண்டாய் -எவர்க்கும்
வளையாத எழுதிடும் பெருமை கொண்டாய்

உன்னை தினம் நான் படிக்கையிலே
உள்ளத்தில் உயர்வான ஆற்றல் கொண்டேன்
உன் உடல் நான் வந்து பார்க்கையிலே
உதடு சிரித்து எனை அழைத்தாய்

சிந்தை இழந்தேன் சில நிமிடம் – நீ
சிகரமே உணர்ந்தேன் அவ் நிமிடம்
உனக்கும் எனக்குள்ள உறவாடல் -இந்த
உலகத்தில் எழுதாத புது பாடல்

உன்னாலே துயராகி வாடுகிறோம்
ஊன் உருகி நித்தம் தேய்கிறோம்
என்றுன்னை இனி நாம் காண்போம்
ஏங்கியே ஏங்கியே தவிக்கிறோம் ..!

சண்முக பெரியப்பா துயர் பிரிவில் ,
அவர்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-07-2023