உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்
Spread the love

உன்னால் தவிக்கிறேன்

எந்தன் வாழ்வு ஏன் சோகமானது
ஏனோ என் கண்கள் நீரானது
வலிகள் மட்டும் நெஞ்சில் தொடரானது
வாழ்வே இன்று மெல்ல இருளானது

எனக்கு மட்டும் ஏன் துயரானது
இது யார் விதித்த சாபமானது
இறந்து போகவே இன்று மனம் எண்ணுதே
இதயம் வேதனையில் இன்று கருகுதே

உந்தன் நினைவு உயிரே என்னை கொல்லுதே
உறக்கம் இன்றியே விழியும் துடிக்குதே
நினைத்த மனதை நினைவு மறக்குமோ
நீயும் மறந்தால் மனம் உன்னை ஒதுக்குமோ

காலம் இந்த காலம் பொய்யானது – உயிர்
காதல் இங்கு வீணானது
தொட முன்னரே தொடரும் முடியுமோ
தொட்டு விட்டால் தொல்லை யாகுமோ

என்ன விதியோ இதை யார் செய்ததோ
பன்மைக்குள்ளே இங்கே பல செயல்களோ
உண்மையானால் இங்கே உறவு வெறுக்குமோ
உயிரும் இங்கே வலியால் துடிக்குமோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-10-2024
0044 7536707793