உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்
Spread the love

உன்னால் தவிக்கிறேன்

கொண்டையில பூ மணக்க
கொலிஸ் ஒலி கால் ஒலிக்க
சாலையில போறவளே – முதுகு
சாளரத்தை காட்டுறியே

கெண்ட மீனு பார்வையாலே
கிண்டல் பார்வை செய்யிறியே
அங்கம் எல்லாம் தங்கா நகை
அணிந்து ஏனோ போகிறியே

பிஞ்சு மர பூவை போல
பிள்ளை நீ சிரிக்கிறியே
அஞ்சு முகம் உன்னைத் தானே
அப்படியே கொஞ்சி விட

காளை மனம் துடிக்குதடி
கலாட்டா செய்துதடி
பாழ் பட்ட பாவை உன்னால் – இந்த
பகல் ஒன்றை தொலைத்தேண்டி

எந்தன் நாளை நீ பறித்து
ஏங்க விட்டு போனவளே
கலோ சொல்ல மறுக்கிறியே
கஞ்ச தனம் காட்டுறியே .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )