உண்மை சொல்

Spread the love

உண்மை சொல்

மூச்சு முட்ட மூச்சு முட்ட
முன்னே வந்து நிற்கிறாய்
முத்தத்தாலே உன்னை தைக்க
முன்னே ஏனோ ஊந்துறாய் ..?

ஆலயத்தின் சாமிகளாய்
ஆடை இன்றி நிற்பதா ..?
இயற்கை தந்த பேரழகை
இயமனுக்கே விற்பதா ..?

ஆசைகளை தூண்டி விட்டு
அருகில் வந்து இரசிக்கிறாய்
அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
ஆராத்தி எடுக்கிறாய் ..?

கலைந்து போன கூந்தலில்
கை வைத்து போனது யார்
கட்டி வைத்த பேரழகை
கடத்தி இன்று விற்றது யார் ..?

விற்பனைக்கு சந்தையில
விண்ணிலவை வைத்தது யார் ..?
விவரமாக சொல்லி விடு
விசாரணைக்கு வருகிறேன் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 05-10-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply