உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள் அர்ச்சுனா ,உங்கள் வாக்கை தீர்மானிப்பதற்குரிய சகல உரிமையும் தமிழனுக்கு உண்டு..
நான் ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றாக கருத்து தெரிவிப்பதை நிறுத்தி விடுகிறேன்..
உங்கள் வாக்கை நீங்கள் விரும்பியவருக்கு அளியுங்கள்.
எந்த சிங்கள ஜனாதிபதியும் தமிழரின் கோரிக்கைகளுக்கு மன சுத்தியுடன் செவி சாய்க்க மாட்டார்கள் என்பது வரலாறு..
ஆனால் இந்த தேர்தலானது தமிழர்களின் வாக்கை மட்டுமே நம்பி இருப்பதால் ஒருமுறை முயன்று பார்க்கலாம் என்று யோசித்தேன்..
அனுராவிடன் கதைக்கும்போது இந்திமா மூலம் அவர்கள் தமிழருக்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொண்டேன்..
சஜித் பிரேமதாஸ் அவர்களுடன் அவர் அழைத்து வர சொன்னதால் கண்டியிலிருந்து கொழும்பு வந்து சென்று கதைத்தேன்..
அவர் என்னை அவர் கட்சியில் சேர்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்..
ஒரு தமிழனாக நான் மாட்டேன் என்று சொன்னேன்..
ஆனால் அவரை ஆதரிப்பதற்கு ஒரு மக்களை அணுகக்கூடிய ஜனாதிபதியாக நான் கருதியே அவரிடம் சென்றேன்..
ஆனால் தமிழ் முஸ்லிம் உறவுகளின் விரிசலை அவர் மேலும் மேலும் வலுப்படுத்தினாரே ஒழிய இன ஒற்றுமையை அவர் அந்த மேடையில் வலுப்படுத்தவில்லை..
முஸ்லிம் அரசியல்வாதிகள் நான் மேடையில் இருப்பதை விரும்பவில்லை..
அவர் அதை கையாண்ட பக்குவம் ஒரு முதிர்ச்சியற்ற ஜனாதிபதி என்பதை எடுத்துக்காட்டியது..
நான் மேடையில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் சொன்னேன் ஒரு தமிழனை நீங்கள் இவ்வாறு நடத்துவது உங்களுக்கு தமிழ் மக்களுக்கான அங்கீகாரத்தை இல்லாமல் பண்ணும். அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தரிடம திரும்பவும் சொல்லவும் என்று..
எனக்கு தன்னுடைய காரில் இருக்குமாறும் தான் வந்து கதைப்பதாகவும் சொல்லப்பட்டது..
அவர் காரில் ஏறி இருப்பதற்கு தமிழன் முப்பது வருடம் தன் உயிரை மாய்த்து ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தவில்லை..
அவ்வாறு நான் ஏறி இருந்திருந்தால் சில வேளைகளில் பொதுமக்கள் நான் ஏதோ டீல் கதைப்பதாக நினைத்திருப்பார்கள்..
இதனால்தான் எனது தொலைபேசிகள் எப்போதுமே ரெக்கார்ட்டில் இருக்கும்..
சுயநலவாதிகள் எனக்கு எதிராக திரும்புகின்ற போது நான் எப்போதுமே அவர் ரெக்கார்டிங் களை அவர்களுக்கு காட்டுவது வழக்கம்..
சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் கதைத்ததை நான் பொதுமக்களுக்கு காட்டுவது வழக்கம்..
மைந்தன் சிவா எனப்படுகின்ற மிகவும் ஒரு அடி முட்டாள் என்னைப் பற்றி எழுதிய பின்பு தான் அவர்கள் முஸ்லிம்களூடாக அதை பரப்பப்பட்ட போது
பாராளுமன்ற உறுப்பினர் திஸஸ அத்தநாயக்க விடம் மற்றும் ராதாகிருஷ்ணன் எம்பி இரு வருடமும் சொல்லிவிட்டு தான் நான் அந்த ரெக்கார்டிங் வெளியில் பொது மக்களுக்காக விட்டேன்..
தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை அடக்கி வைக்கும் போது எனது சுயமரியாதையை இழந்து சஜித் பிரேமதாச அவர்களுக்கு நான் ஒருபோதும் உதவ முடியாது..
இதிலிருந்து சஜித் பிரேமதாச, தான் பக்குவம் அற்றவர் அல்லது அவரின் பின்னால் இருப்பவர்கள் அவரை பகடைக்காயாக பயன்படுத்தி
பாராளுமன்றத் தேர்தலில் வாக்குகளை பெறவே முயற்சிக்கிறார்களே அன்றி அவரை ஜனாதிபதியாக மாற்றிப் பார்க்க எந்த ஒரு முயற்சியை எடுக்கவில்லை.. இவை முக்கியமாக முஸ்லிம் எம்பி களுக்கானது..
இதிலிருந்து சஜித் பிரேமதாஸ் அவர்களின் அத்தியாயம் முடிக்கப்படுகிறது..
அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்குரிய முக்கியமான காரணம் உமா சந்திர பிரகாஷ் எனப்படுகின்ற முட்டாள் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கிறது..
நான் எனது தொலைபேசிகள் அனைத்தையுமே முடிவுறுத்தி விட்டேன்…
இனிமேல் சஜித் பிரேமதாச அத்தியாயம் விடைபெறுகிறது..
ரணில் விக்ரமசிங்க அவர்கள் முழு தமிழ் எம்பிக்களும் டீல் அடித்து தன்னுடன் இருப்பதால் தமிழ் வாக்குகள் கிடைக்கும் என நினைத்து தமிழர்களின்
பிரதிநிதியாக இதுவரை காலமும் எமது பொதுமக்களை ஏமாற்றிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் வெல்லலாம் என நினைக்கிறார்கள்..
முக்கியமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னுடைய நம்பிக்கை வலயத்தில் இருந்து நான் இழந்ததுக்கு காரணம் எனது முன்னாள் சட்டவாளர் சிலஸ்டின் அவர்கள் மட்டுமே..
அவர்கள் அமைச்சரின் ஏகப்பிரதிநிதியாக எனது மற்றுமொரு சட்டவாளர் அன்டன் புனித நாயகன் அவர்களுடன் சேர்ந்து என்னை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் ஆளாக காட்டுவதற்கு திட்டமிட்ட ரீதியில் ஆஸ்திரேலியாவில்
வசிக்கின்ற எனக்கு சார்பாக உதவி செய்து கொண்டிருந்து சுமந்திரனின் அடியாளான பாலா விக்னேஷ்வரன் அவர்களுடன் இணைந்து என்னை இபிடிபி ஆக காட்டி தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்காக செய்த முயற்சிகள்.
அதுமட்டுமல்ல ஏழாம் திகதி நான் மன்னார் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட போது பொதுமக்களை சந்திக்க விடாமல் அண்டன் புனித நாயகம் அவர்கள் தனது காரில் ஏற்றி அங்கும் இங்குமாக அலைத்து திட்டமிட்ட ரீதியில் மக்களை
என்மேல் கோபப்பட செய்து மறுபடியும் புதுமைதானத்தில் கொண்டே இறக்கி குழப்பம் செய்தது பாலா விக்னேஸ்வரனுடனும் அண்டன் புனித நாயகத்துடனும் எனது தொடர்புகளை நிறுத்திக் கொண்டதற்குரிய காரணம்..
இவர்கள் எனக்கு உதவுவது போன்று திட்டமிட்ட ரீதியில் என்னை எனது மக்கள் ஆதரவை குறைப்பதற்கு முயன்ற போது எல்லாம் அறிந்து கொண்ட நான் அமைதியாக இருந்தேன்…
மேலும் அஜித் எனப்படும் சாவகச்சேரியை சேர்ந்த டக்ளஸ் அவர்களின் கையாள் திட்டமிட்ட ரீதியில் என்னை வளைத்து போட முயன்றதும் அவர்களுடைய தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்..
அது தவிர தம்பிராசா எனப்படுகின்ற எனக்கு யார் என்றே தெரியாத ஒருவர் என்னை உரிமை கூறுகின்ற போது நான் அவரிடமிருந்தும் தொடர்புகளை எப்போதோ அறுத்து கொண்டேன்..
இராமநாதன் அர்ச்சுனா எனப்படுகின்ற வைத்தியரை அரசியலால் கொலை செய்ய நடந்த சதிகள் இவை மட்டுமல்ல இதற்கு மேலும் மேலும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது..
எனக்கு ஒன்று ஒரு நம்பிக்கையான நட்பு வட்டம் சாவகச்சேரியில் இருக்கிறது..
அவர்கள் தான் என்னை சாவகச்சேரியில் தூக்கி வைத்து சந்தோசம் கொண்டார்கள்..
நான் அவர்களுடன் மீண்டும் போய் இணையும் வரை தயவுசெய்து எனது சாவகச்சேரி நட்பு வட்டம் பொறுமையாக இருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..
இப்போது அனுராவிக்கோ சஜித்துக்கோ ரணிலுக்கோ என் சார்பில் எந்த ஆதரவும் கொடுப்பதற்கு தயாராக இல்லை..
புது வேட்பாளர் பற்றிய மக்களின் கருத்து அவர்களுடைய சுய சிந்தனை சரியாக இருந்தால் ஒற்றுமையாக பொது வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளிக்கலாம்..
ஆனால் மீண்டும் ஒரு விடயம் சொல்ல விரும்புகிறேன்…
அனுரா அவர்கள் ஜனாதிபதியானால் ரணில் அவர்கள் அவரிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு ஒதுங்க போவதில்லை..
அனுரா அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள் அல்லது இராணுவத்தால் கொல்லப்படுவார்.. அப்போது பொதுமக்கள் பாதையில் இறங்கி இந்த நாடு மீண்டும் ஒரு 1987 போன்ற பட்டலாந்து படுகொலையை சந்திக்கும்..
அதற்குரிய அமெரிக்காவின் ஆதரவும் இந்தியாவின் ஆதரவும் ரணில் அவர்களுக்கு தாராளமாக உண்டு..
இராணுவ ஆட்சி நிறுவப்படுமாயின் பல தலைவர்கள் கொலை செய்யப்படலாம்..
பொதுமக்கள் கொத்துக்கொத்தாக பாதைகளில் சுட்டுக் கொல்லப்படலாம்..
இவை எனது எதிர்கூறல் மட்டுமே..
சஜித் அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் அதே பாதாள லோக அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை..
பாராளுமன்றம் ஒருபோதும் கலைக்கப்படாது..
மாகாண சபை தேர்தலோ உள்ளூர் ஆட்சி சபை தேர்தலோ மீண்டும் வைக்கப்படும்..
அனுரா அவர்கள் காணாமல் ஆக்கப்படுவார்கள்..
பொதுமக்கள் கிளர்ச்சி எழும்.. மீண்டும் கொலைகள் நடந்தேறும்..
ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆனாலும் அதே பாதாள கூட்டங்கள் அதே பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே தமிழ் மக்களுக்கான எதிரான கெடுபிடிகள் எப்போதுமே இருக்கும்..
இன்னும் ஐந்து வருடங்களுக்கு இராணுவமயமாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட்டு தமிழர்களின் இனம் அழிக்கப்படும்..
முஸ்லிம்கள் எப்போதுமே ரணிலுடன் இருப்பதால் தமிழர் எதிரான திட்டமிட்ட இனவெளிப்பு கட்டாயம் நடந்தேறும்..
கடந்த வருடத்தில் மட்டும் 80,000 தமிழர்கள் இலங்கையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள்..
வெளிநாட்டு உதவி உள்ள தமிழர்கள் வெளியேறுவார்கள்..
நான் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுவேன்..
மீண்டும் அதே தமிழ் எம்பிக்கள் பொத்துவில் இருந்து புண்ணாக்கை கொண்டு வந்து பொதுமக்களை ஏமாற்றுவார்கள்.
அதே புலம்பெயர் தமிழர் கூட்டங்கள் ஒரு சில புலிக்கொடிகளுடன் சீமானுடன் அங்கேயும் இங்கேயும் ஓடித் தெரியும்..
எல்லா கடைகளிலும் உண்டியல் வைக்கப்படும்…
மீண்டும் பொதுமக்கள் வெளிநாட்டில் குளிர்களில் உழைக்கின்ற பணங்கள் சேர்க்கப்பட்டு ஐநா சபை மற்றும் சர்வதேச உதவிகளுடன் தமிழருக்கு நீதி கிடைக்கும் என இன்னும் ஒரு இருபது வருடம் இழுத்தடிக்கப்படும்..
தமிழின விகிதாசாரம் மெல்ல மெல்லமாக அழிக்கப்பட்டு இன்னும் இருபது முப்பது வருடங்களில் தமிழினம் இலங்கையை விட்டு மொத்தமாக வெளியேறும்..
நானும் இதர பல தமிழர்களும் காணாமல் ஆக்கப்படுவோம்..
இவற்றிற்கு உள்ளே சிறந்த தெரிவு எதுவென்பது பொது வேட்பாளராக இருந்தால் அங்கேயும் பிரச்சனைகள் உள்ளது..
பொது வேட்பாளரை வைத்துக்கொண்டு ஐநாவிற்கு போய் நீதி கிடைத்த வரலாறு 2009 இல் இருந்து இன்றுவரை நடக்கவில்லை..
பொது வேட்பாளர் என சொல்லப்படுகின்ற கூட்டங்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் நன்றாக பணங்களை சேர்த்து பிள்ளைகளுக்கு ஹெலிகாப்டரில் சாமத்திய வீடும் ரீச்சா மற்றும் ஐ பி சி போன்ற ஊடகங்களை நடத்தியும் மிச்சம் இருக்கின்ற தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும்..
எமக்கென உள்ள தலைமை வெற்றிடமாக உள்ளது என சிவனடியான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்..
நல்லதொரு தலைமையை தேடுங்கள்..
அது நிச்சயமாக சுமந்திரனோ சாணக்கியனோ ஸ்ரீதரனனோ அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவோ அல்லது அரிய நேந்திரனோ அல்ல..
இவைதான் எனக்குத் தெரிந்த அரசியல் அறிவு..
இவை பிழை என்றால் சரியான கருத்தை சொல்லுங்கள்..
ஒரு உண்மையான தலைமை தமிழனுக்கு கிடைக்கும் வரை யாழ்ப்பாணமோ மட்டக்களப்போ மிஞ்சப் போவதில்லை..
நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்..
நான் ஏற்கனவே வைத்திய சேவையில் இருந்து விலக்கப்பட்டு விட்டேன் திட்டமிட்ட ரீதியில்..
பெரும்பாலும் காணாமல் ஆக்கப்படுவேன்..
என்னை எதிர்த்த ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே நொந்து கொள்ளும் நாட்கள் விரைவில் வரும்..
எனக்குத் தெரிந்தவை எல்லாம் தமிழனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே..
இருந்தேன் சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அட்டூழியங்களை வெளியில் சொன்னேன்..
மன்னர் போய் சிந்துஜாவின் நீதியை கேட்டேன்..
அவை சம்பந்தமாக எனது தமிழ் உறவுகளாலேயே விமர்சிக்கப்பட்டேன்..
இப்போது கூட ஓடிக்கொண்டே இருக்கிறேன்..
உயிருக்கு பயந்து அல்ல.
உயிருக்கு பயந்தவன் முஸ்லிம் மேடையில் இருந்து இறங்கி நான் போய் வருகிறேன் என சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் சஜித் பிரேமதாசவின் ஓடியோ லீக் பண்ணி இருக்க மாட்டான்..
உயிருக்கு பயந்தவன் இவ்வளவு விமர்சனங்களையும் தெளிவாக முகப்புத்தகத்தில் எழுத மாட்டான்..
என் தொழிலை இழந்து இருக்கிறேன்..
என் குடும்பத்தை என்னால் சென்று பார்க்க முடியாது..
எனது உடலையும் பேராதனை வைத்தியசாலைக்கு இப்போதோ எழுதிக் கொடுத்து விட்டேன் முதன் முதலாக..
எனது உறுப்புகள் அனைத்தும் தானமாக வழங்கப்பட்டு விட்டன..
என் உயிரை தமிழனுக்காக கொடுத்திருக்கிறேன்..
என் எதிரிகளுக்கு என் என்ன வேண்டும்??
தமிழனாக தமிழனுக்கு பிறந்தேன்..
என் உயிர் மூச்சு இருக்கும் வரை தமிழுக்காக எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கும்..
உங்களால் முடிந்தால் இவற்றில் ஒன்றையேனும் செய்து பாருங்கள்..
குடும்பம் தொழில் உயிர் உடல்..
ஒன்றையேனும் செய்துவிட்டு பதிவிடுங்கள்..
இருந்தால் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு..
எப்படி வசதி?
தமிழனின் தாகம்…..
மக்களால் அதிகம் விரும்பப்பட்ட விரும்பப்படுகின்ற தமிழ் மெடிக்கல் அட்மின்..
வைத்திய கலாநிதி இராமநாதன் அர்ச்சுனா.
- 34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
- திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்
- ரணிலுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு தடுத்து நிறுத்திய பொலிஸார்
- லொறி மீது வேன் மோதி கோர விபத்து இந்தியர் பலி
- புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு
- ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
- பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
- மக்கள் சந்திப்பு சங்கு கட்சி
- தம்பிராசா பிணையில் விடுதலை
- 10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை