உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
Spread the love

உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

உக்கிரேன் நாட்டுக்கு அமெரிக்கா அரசு ஒரு பில்லியன் டொலருக்கு மேற்பட்ட ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ளது .

ரசியாவின் தாக்குதலினால் பலத்த இழப்புக்களை சந்தித்து வரும் உக்கிரேன் இராணுவம் ,அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் ஊடாக பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப் பரப்பை மீட்டுள்ளது .

இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளை மீள தக்கவைத்து கொள்ள ஆயுதங்கள் தேவை படுகின்றன .

அதனால் உடனடி விநியோகத்திற்கு ஏற்ப அவசர உதவியாக ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .

உக்கிரேன் போர் களத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் என்பன அதிகளவான ஆயுதங்களை விற்பனை செய்து ,தமது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் உள்ளன .

உதவி என்கின்ற போர்வையில் , ஆயுதங்களை பில்லியன் கணக்கிற்கு விற்பனை புரிந்து வருவதுடன் ,தமது ஆயுதங்களை உக்கிரேன்
களத்தில் வெற்றிகரமாக சோதனையும் செய்த வண்ணம் உள்ளன .

Leave a Reply