ஈழம் மலரும் காத்திரு

Spread the love

ஈழம் மலரும் காத்திரு

இறந்தவர் கல்லறை உடைத்த கேவலன்
இவனா இலங்கா கோமகன் ..?
படைத்தவன் பிரம்மன் படைப்பினை அறிவான்
பலியுன்னை எடுக்க வருவான்

அறுக்கையில் தலைகளை
அழுதன குரல்கள்
அவை கண்ணீர் சாபம் விடுமா ..?- உன்
அரியணை இங்கு தொடருமா ..?

எரியும் நெஞ்சின்
எரிமலை பிழம்புகள்
எழுந்தே ஒரு நாள் ஆடும்
எங்களின் தேசம் மலரும்

விடுதலை என்றுமே சாகாது – அதன்
விதிகள் என்றுமே மாறாது
செய்தவன் பலியது தீர்க்காது
செந்தமிழ் என்றுமே உறங்காது

இனக்கொலை புரிந்த உன்னோடு
இணைந்து வாழ்தல் முறைகேடு
தனியது அரசை தமிழ் அமைக்கும்
தரணியில் இதற்கொரு இடம் கிடைக்கும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 22-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply