ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா
Spread the love

ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

அடுக்களையில் குந்தியவள்.
அடுத்தவருக்காய் ரத்தம் சிந்தியவள்.

✍️ பாத்திரங்கள் மினுக்கியவள்.
பாத்திருக்க பகையை நொறுக்கியவள்.

✍️விடுதலையின்றி ஏங்கியவள்.
சுடுகலனை கையில் ஏந்தியவள்.

✍️கவலையில் விழி வாடியவள்.
கடலில் சுழி ஓடியவள்.

✍️இயந்திரமாய் இருந்தவள்.
சுதந்திரமாய்ப் பறந்தவள்.

✍️கடும் சட்டங்களால் துடித்தவள்.
கரும்புலியாக வெடித்தவள்.

✍️புறநானூற்றை மேவியவள்.
பிறநாட்டுடன் மோதியவள்.

✍️புலிவடிவாக சீறியவள்.
புயல் மழையாக மாறியவள்.

🍁பூவாக மலர்ந்தவள்.
👍புது வரலாறாக நிமிர்ந்தவள்.❗

-பிறேமா(எழில்)-28-05-2024