ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
Spread the love

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை ரஷ்யாவிற்கு ஆளில்லா வெடிகுண்டு விமானங்களினை விற்பனை புரிந்த ஈரான் நிறுவனர் மற்றும் ,அந்த விற்பனைக்கு உதவிய ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவருக்கு தடை

, ஆறு பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ,தடை மற்றும் பயண தடை அவர்களின் சொத்து முடக்கம் என்பனவற்றை அறிவித்துள்ளது .

ரஸ்யாவுக்கு ஈரான் விற்பனை செய்யும் வெடிகுண்டு விமானங்களானவை உக்ரைன் போரில் உக்ரைன் மற்றும் ,ஐரோப்பிய , அமெரிக்கா நேசப் பாடுகளை திணறடித்து வருகிறது .

ஐரோப்பிய ஒன்றியம்


அதனால் சீற்றம் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீதான தடைகளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது .

ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையானது (EEAS) ஈரானைச் சேர்ந்த ஆறு தனிநபர்கள், ஆயுதக் குழுக்கள் மற்றும் நிறுவனங்களானவை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு விற்பனை செய்தனர் .

இதுவே மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி மூன்று நிறுவனங்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ளது.,

ஈரானின் பாதுகாப்பு மந்திரி

ஈரானின் பாதுகாப்பு மந்திரி பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா அஷ்டியானி மற்றும் ஈரானின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் ஆர்கனைசேஷன் (ஐஏஐஓ) தலைவர் அஃப்ஷின் கஜே ஃபார்ட் ஆகியோரை ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தடை தொடர்பாக பட்டியலிட முடிவு செய்துள்ளது

இலக்கு வைக்கப்பட்டவர்கள் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பயணத் தடை க்கு உட்படுத்தப்படுவார்கள்.

கூடுதலாக, பட்டியலிடப்பட்டுள்ள சட்டப்பூர்வமான மற்றும் சட்ட பூர்வமற்ற நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி அல்லது பொருளாதார ஆதாரங்களை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் பின்னர் இந்த தடையை ஈரானுக்கு ஐரோப்பா விதித்துள்ளது .

பல தடைகள் ஈரான் மீது விதித்துள்ள பொழுதும் ,அது கடந்து ஈரான் சாதனை படைத்தது அமெரிக்காவுக்கு சவால்விட்டு நிமிர்ந்து நிற்பது குறிப்பிட தக்கது .