இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது
Spread the love

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது

இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது ,வடக்கு இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா ராணுவத்தினர் 215 ரொக்கெட்டுகளைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தினர் .

வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவத்தின் ஆறு இரு ராணுவ முகாம்களை இலக்கு வைத்தும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து இந்த ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு இழப்பு

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மிக முக்கியமான கட்டளை தளபதி ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தின் விமான குண்டு வீச்சில் பலியாகியதை அடுத்து,அதற்கு பலி வாங்கும் பதிலடி தாக்குதலாகவே இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தின் ஆயுத கூடங்கள் ஏவுகணைத் தளங்கள் பீரங்கி தளங்கள் அயோண்டோம் ஏவுகணைகள் ராடர் கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் உள்ளிட்டவை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

அதேபோல இஸ்ரேலிய ராணுவத்தின் விமானத் தளமும் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தாக்குதலை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரிய ராணுவத்தினர் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.

வீடியோ