இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்
Spread the love

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட்

இஸ்ரேல் நகரங்களை தாக்கிய ரொக்கட் ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகளினால் 80ரொக்கட் வீச்சு அலறும் இஸ்ரேல் நகரங்கள் .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளினால் ,வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ,கடந்த 24 மணித்தியால இடைவெளியில் 80க்கு மேற்பட்ட நீண்ட தூர ரொக்கட் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

வடக்கு பகுதியில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தின் கண்காணிப்பு முகாம்கள் ,ராடர் நிலையங்கள் ,ஏவுகணை தளங்கள் ,பீரங்கி தளங்கள் ,இராணுவ ஆயுத சேமிப்பு கூடங்கள் ,மற்றும் ராணுவ கூடங்கள், என்பனவற்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கின்றது .

லெபனான் கிஸ்புல்லா போரப் படைகள்

இந்த தாக்குதலில் இஸ்ரேலியபடைகளுக்கும் அதன் ராணுவத்தினருக்கும் ஆயுதங்களுக்கும் பலத்த இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக, தெற்கு லெபனான் கிஸ்புல்லா போரப்படைகள் தெரிவித்துள்ளன .

ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள இஸ்ரேலிய இ ராணுவ தரப்பினர் ,அதனால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

தாக்குதலை நடத்திய தெற்கு ஹிஸ்புல்லா போர் படைகள் , அங்கு எரிகின்ற காட்சிகளையும் ,எதிரி முகாம்களுக்குள் ரொக்கெட்டுகள் துல்லியமாக விழுந்து வெடிக்கின்ற காணொளிகளை வெளியிட்டுள்ளனர் .

இதனால் ஹிஸ்புல்லா கூறியது போன்று எதிரி முகாம்களுக்குள் தாக்குதல் ,துல்லியமாக இடம்பெற்றுள்ளதும் ஆக்கிரமிப்பு ,அபகரிப்பு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு ,பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அந்த காணொளிகள் ஊடாக காண முடிகிறது.