இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி
Spread the love

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி ,கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளை மீட்க அப்பாவி மக்கள் 210 பேரை கொன்றுள்ளது .

அவ்விதமான தாக்குதலை நடத்தியே யூத ராணுவம் திடீர் ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டு சென்றது .

இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது நான்கு கைதிகளை மீட்க பட்ட பகுதியில் அமைந்துள்ள 2 அகதி முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

210 மக்கள் பலியாகியுள்ளனர்

இதன் பொழுது 210 மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இரண்டு முகாம்களிலும் பெண்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட 210 பேரை ஈவிரக்கம் இன்றி கொன்றுவிட்டு இந்த நான்கு பேரையும் சிறை மீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்திரேலிய ராணுவத்தின் விசேட விமானங்கள் ,காமெண்டோ படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்தின .

அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்தி அங்கிருந்த அந்த நான்கு கைதிகளை மீட்டு சென்றனர்.

இவ்வாறு மீட்டு சென்றவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்டவர்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளன .

பாலஸ்தீன மக்களை படுகொலை

210 மக்களை படுகொலை செய்து நான்கு தமது மக்களை மீட்டுச் சென்ற இந்த சம்பவம் அரபிய தேசங்களில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

சியோனிசம் நடத்திய இந்த படுகொலையின் பின்னர், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் படுகொலை செய்யக் கூடும் என்கின்ற ஐயம்நிலவுகிறது .

இஸ்ரேலின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம்

கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இதே போன்றான தாக்குதலை நடத்தி ஏனைய கைதிகளையும் நாங்கள் மீட்டு வருவோம் .

அதற்காக எத்தனை ஆயிரம் காசா மக்களையும் படுகொலை செய்ய தயங்கமாட்டோம் என்பது ,இஸ்ரேல் ராணுவத்தின் செயலாகவே இந்த இனப்படுகொலை தாக்குதல் காண்பிக்கின்றது.

அப்பாவி மக்கள் படுகொலையை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க விடுதலை போராளிகள் இணைந்து ,கூட்டு தாக்குதல் ஒன்றை இசுரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .