இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி
Spread the love

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி ,கமாஸ் விடுதலை போர் படைகள் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ தளபதி பலி.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்திரேலியா இராணுவத்தின் மிக முக்கியமான தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக இஸ்ரயேலிய ராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்திரேலியா கைதிகளை மீட்பு

காசா பகுதியில் மறைவிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்திரேலியா கைதிகளை, மீட்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேலிய ராணுவத்தின் சிறப்புமாண்டாக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

இதன் பொழுது நால்வர் மீட்டு செல்லப்பட்டனர். மிக முக்கியமான தளபதி ஒருவர் சம்பவத்தில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய கட்டளை தளபதியே பலியாகியுள்ளார் .

கமாஸ் போர் படைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் தளபதியாக செயல்பட்டவரே காயம் அடைந்த நிலையில் தற்போது பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தரும்படி கோரி இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

எட்டு மாதங்களை கடந்து இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தில், இடம்பெற்ற இரண்டாவது கைதிகள் மீட்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது .

வெற்றிகரமான கைதிகள் மீட்பு தாக்குதலாக முடிவு பெற்றுள்ளதாக ,இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

இவர்களைப் போன்று ஏனையவர்களையும் தாங்கள் மீட்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ சிப்பாய்களாக இருக்கலாம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது .எனினும் முழுமையான தகவல் ஏதும் தெரியவரவில்லை .