இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி
Spread the love

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி

இளைஞனின் வயிற்றில் கத்தி நகவெட்டி ,இந்தியாவின் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் (22) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

அந்த இளைஞரை அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து அவருக்கு வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சை மூலம் அவரது வயிற்றில் இருந்து சாவி வளையம், சிறிய கத்தி, 2 நகவெட்டி உள்ளிட்ட உலோகப் பொருட்களை வைத்தியர்கள் அகற்றினர்.

அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள் குழுவின் தலைவர் வைத்தியர் அமித் குமார் கூறுகையில்,

நாங்கள் இளைஞரிடம் கேட்டபோது, அவர் சமீபத்தில் உலோக பொருட்களை விழுங்க தொடங்கியது தெரிய வந்தது.

சிகிச்சைக்கு பின்னர் இளைஞர் நலமாக உள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு சில மனநலப் பிரச்சனைகள் உள்ளன, அதற்காக அவர் மருந்து உட்கொண்டு வருகிறார். இளைஞர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறினார்.