இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்
Spread the love

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம்

இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தியவர் பணி நீக்கம் செய்யப்பட்டுளளார் ,இலங்கையில் போதையில் ரயிலை செலுத்தி சென்ற சாரதி ஒருவர் தற்பொழுது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகார சபை தெரிவித்துள்ளது .

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை

பயணிகள் பயணித்த ரயிலை அதிக அளவாக போதையை அருந்தி ரயிலை செலுத்தி சென்றதன் காரணத்தினால் ,அவர் அங்கு உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக போதை காரணமாக ஓடிச் சென்ற ரயிலை இடையில் நிறுத்திவிட்டு அவர் தப்பியுள்ளார் .

அதை எடுத்து மக்கள் நபரை துரத்தி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

போதை காரணமாக ஓடிச் சென்ற சாரதிக்கு ஆப்பு

அதனை அடுத்து தற்போது போக்குவரத்து பிரிவு மேற்கொண்ட தீவிர விசாரணை எடுத்து அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் ரயில்வே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர் அதிகமான போதையில் இருந்த போதும் பயணிகள் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்
மக்கள் அஞ்சலிக்காக சம்பந்தன் உடல்

இலங்கையில் ரயில்வே சாரதிகள் பேருந்து சாரதிகள் இவ்வாறு நடந்து கொள்வது மிகப் பெரும் ஆபத்தையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் சம்பவமாக பார்க்கப்படுகின்றது .

சமீப காலங்களாக இலங்கையில் இடம் பெற்று வருகின்ற ரயில் விபத்துக்கள் பேருந்து விபத்துக்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரம் பெற்று வருகின்றன.

இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருகின்ற சம்பவம் சாரதிகளின் அலட்சியப் போக்கும் போதையில் அவர்கள் வண்டிகளை செலுத்துவதை காரணம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தப்பிய ரயில் பயணிகள் அரச அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை

தற்பொழுது ரயில்வே சாரதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

இவ்வாறானவர்கள் தொடர்ந்து பணியில் வைத்திருந்தால், மேலும் பெரும் ஆபத்தினை மக்கள் சந்திப்பார்கள் என்பதால் ,அவர் இந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் .

தனது மகிழ்வுக்காக அருந்தபட்ட போதையினால் அவர் தனது பணியை இழந்து தற்போது நிர்கதியாக நிற்கிறார் என முடியும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.