இறைவனை தேடு

இறைவனை தேடு
Spread the love

இறைவனை தேடு

ஏழை சொல்லு ஏறாதடா – வலி
எவருக்கும் புரியாதடா
பார்த்து பார்த்து சிரிப்பாங்க
பல் இழித்து நகைப்பாங்க

விட்டு தள்ளடா – காலம்
விரைவில் வெற்றி பகிருமடா
நீயும் நானும் ஒன்னடா
நீர் விழியில் இல்லைடா

மனிதனை புரிஞ்சிக்க
மன்றில் நாடகம் நடக்குதடா
மாளிகையில் வாழும் போது
மனிதர் மட்டும் வையடா

சுய நல உலகத்தில
சூரியனும் உதிக்குதடா
சூடும் குளிரும்
சுழற்சியில் பகிருதடா

கால நிலை தான் வாழ்க்கை
கற்று தெரிந்தால் விடு செருக்கை
நீயும் நானும் மனிதனா
நின்மதி இப்போ இருக்கா

பதில் இல்லா அலைந்தாயே
படைத்தவன் தெளிய வைத்தேனே
இன்று என்ன செய்வாய்
இறைவனை தேடு இறைவனை தேடு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2023