இறுதிவரை இவனே துணை

இறுதிவரை இவனே துணை
Spread the love

இறுதிவரை இவனே துணை

கருணை கொள்வான் கடவுளை நம்பு
காலை மாலை அவனை வணங்கு
நெஞ்சின் நெருடல் வருடி எறிவான்
நேசம் ஊட்டி மகிழ்வை தருவான்

சொல்லும் செயலும் அவனே தருவான்
சொன்னதை செய்யும் அருளும் புரிவான்
தனிமை விலக்கி தாயாய் மலர்வான்
தகமை அளித்து உலகை தருவான்

கண்ணின் ஒளியாய் அவனே இருப்பான்
கடினம் இலகு இரண்டும் தருவான்
தெளிந்து நிமிர தெளிதல் புரிவான்
தெவிட்டா திருக்க தேடுதல் அளிப்பான்

மலர்ந்த அகமது மன்றில் தருவான்
மலரும் சேவை முதலே இடுவான்
மடியும் வரையில் இவனை நினைப்பாய்
மனதில் நின்மதி பெற்று வாழ்வாய் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-12-2023