தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இரவு ஊரடங்கு
தமிழகத்தில் ஜனவரி 31-ம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.