இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம்
இரண்டு பேருந்து நேர் எதிர் மோதல் பலர் காயம் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .
மஹாஓயா அரலகங்வில வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 22 பேர் காய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்துக்கு காரணமான பேருந்து சாரதி ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது அலட்சியப் போக்கும் போட்டி போட்டு பேரூந்தை ஒட்டி சென்றதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் இரண்டு ஆண்கள் 12 பெண்கள் ஆறு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற போட்டியின் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முற்பட்ட பொழுது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நேரடி சாட்சிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற பேருந்து விபத்துகளினால் பல மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
அவ்வாறு இந்த விபத்துக்கள் இடம் பெறுவதற்கு சாரதிகள் முக்கிய காரணமாக அமைகின்றனர்.
அவ்வாறே இந்த தனியார் பேருந்து இரண்டும் நேரெதிர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதும் அப்பாவி மக்கள் காயமடடைந்தும் இருந்தும் காணப்படுகின்றனர்.
நாள்தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான பேருந்து விபத்துக்களினால் பேருந்தில் பயணிப்பதற்கு மக்கள் தற்பொழுது அச்சம் அடைந்து வருவதாக பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
- சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்
- மனைவியை கொலை செய்த கணவர் கைது
- சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
- நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா
- 3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
- தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது
- பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
- ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு
- 4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்