இப்போ என்ன சொல்வாய்
உன் சிரிப்பை நான் கேட்டால்
உனக்கென்ன கோபமோ ..?
என் சிரிப்பை நான் தந்தால்
ஏன் எடுக்க வெட்கமோ …?
வங்கி என்றால் கடன் கொடு
வட்டி முதல் தந்திடுவேன்
வாங்கியதை தந்து விட்டால்
வழி வெட்டி என்னை விட்டு விடு
முத்தமிடும் மழைத்துளியை
முற்றம் ஏற்க மறுப்பதில்லை
பின்னிரவில் மனிதரெல்லாம்
பிள்ளை பெற்றும் உறைவதில்லை
அந்தி மட்டும் உறங்காவிடின்
அணைத்து பால் கதறுமடி
படைத்தவனை நினைத்து பார்
பகலிரவின் முழுமையடி
முழு நூல்கள் படித்து விட்டால்
முத்தி இன்று பெற்றிடுவாய்
இத் திரையில் நீ இருப்பாய்
இன்றே கடவுளாவாய் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 14-08-2021
http://ethirinews.com/
வன்னி மைந்தன் கவிதைகள்