இன்றைய பாலஸ்தீனம்

இன்றைய பாலஸ்தீனம்
Spread the love

இன்றைய பாலஸ்தீனம் ..

மூச்சு விட முடியாது
முண்டியடிக்கும் கூட்டம்
காற்று வரும் திசையறிந்து
கை காட்டி நிற்கிறது

வீச்சு வலை வீசி இஸ்ரேல்
விதமாய் உயிர் குடிக்கிறது
காத்துவிட மாட்டாயா
கரங்கள் தொழுகிறது

பேச்சு இழந்து போக வா
பெரும் கூட்டம் திரள்கிறது
பேர் பெற்ற வல்லரசின்
பெருமை நன்றே தெரிகிறது

வாலாட்டி திரிவதுவோ
வாழ்க்கை சிரிக்கிறது
கோலேற்றி வாழ்ந்து விட
கொள்கை துடிக்கிறது

நாள் ஒன்று கழிகையிலே
நாடி சோர்கிறது
நான் இறந்து போவேனோ
நம்பிக்கை இழக்கிறது

இப்படித்தான் ஊர்கிறது
இன்றைய பாலஸ்தீனம்
இறந்தாலும் அழுது விட
இங்கு இன்னும் தடை தான் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு

வீடியோ