இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவை :கொசோவோ துணைப்பிரதமர்

Spread the love

இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவை : ஈழத்தமிழர்களுக்கு கொசோவோ துணைப்பிரதமர் Haki Abazi தோழமை !

நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையேயான சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிக்கும் இவ்வேளையில், இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணியொன்று உலகத்தின்

இன்றைய தேவையாக உள்ளதென கொசோவோ நாட்டு துணைப்பிரதமர் அக்கி அபாசி ( Haki Abazi ) அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசெம்பர் 5.6ம் தேதிகளில் நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு

அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அகதிகள் பெருமளவில் வெளியேறிவரும் நிலையில்,

ஏதிலிகளின் குரல்களுக்கு நடுவேயே இனச்சிக்கல்குறித்தான் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டியதாகவுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொசோவைவின் துணைப் பிரதமராகவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பணியாற்றிய அக்கி அபாசி அவர்கள், ஐரோப்பாவில் சிவில் சமூகத்தினை

வளர்த்தெடுப்பதில் அக்கறை செலுத்தியவர் மட்டுமல்லாது பல சர்வதேச மனிதாபிமான தொண்டு நிறுவனங்களிலும் உயர்பொறுப்புக்களை வகித்தவர்.

கொசோவா மக்களது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க அங்கு நடந்த பொதுவாக்கெடுப்பு பொறிமுறை போன்றே, ஈழத்தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற

பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், ஈழதமிழர்களுக்கான தனது தேசத்தின் தோழமையினை தெரிவித்து அவர் ஆற்றிய உரையின் பிழிவு :

நாடுகளுக்கு இடையே, இனங்களுக்கு இடையே சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. சிக்கல்களை களைவதும் இன்னல்கள் நிறைந்த பாதையாகவே இருக்கின்றது.21ம்

நூற்றாண்டில் இந்த உலகமயமாதலின் பின்னராக தற்போதைய சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பின்னராக இப்பணி எளிதாகவே

இருக்க வேண்டும். ஆனாலும் இந்த இனச்சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த காலகட்டத்தில் இனச்சிக்கல்களுக்கு எதிரான ஒரு கூட்டணி ஒன்று தேவையாகவுள்ளது. குறிப்பாக இனப்படுகொலைகளுக்கு எதிரான கூட்டணி தேவையாகவுள்ளது.

அகதிகளின் அலைந்துழ்வு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஜேர்மன் நாடுபோன்று பிற நாடுகளும் அகதிகளை திறந்த

கதவுகளுடன் ஏற்றுக் கொண்டால் சிறப்பாக இருக்கும். ஆனால் நிலைமைகள் அவ்வாறு இல்லை.

இனச்சிக்கல்கள் குறைந்தால்தான் குறிக்கீடுகளும் குறையும். குறிப்பாக சிரியா, லிபியா,ஆப்பாகானிஸ்தான் போன்ற நாடுகளில்

இருந்து அகதிகள் பெருமளவில் வெளியேறிவரும் நிலையில், இந்த குரல்களுக்கு நடுவேயே இனச்சிக்கல்குறித்தான குரல்களை ஓங்கி ஒலிக்க வேண்டியுள்ளது.

கொசோவோ தனிநாடாகவிட்டது என்பதால் அதன் பிரச்சனைகள் முடிந்துவிட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது பெரும்

பணியாகவுள்ளது.கொசோவோவில் 90 வீதம் அல்பேனியர்களே உள்ளதோடு, அல்பேனிய மக்கள் ஐந்து நாடுகளில் சிதறுண்டு உள்ளனர்.

கொசோ விடுதலைப் போராட்ட தடம்

ஓட்டமான் பேரசு காலத்தில் இடம்பெற்ற ஆக்கிரமிப்பின் போதுதான் அல்பேனிய மக்களை கொண்ட கொசோவோ மற்றவர்களின் கையில் வீழ்ந்தது. ஆக்கிரமிக்கப்பட்டது.

1989ம் ஆண்டு பேர்லின் சுவர் வீழ்ந்தது. அதில் இருந்துதான் பால்கன் பிராந்தியத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. அவ்வேளையிலே கொசோவோ அல்பேனியவர்கள் செர்பிய

சிறைகளில் காரணங்களன்றி பல்லாயிரணக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். 1989ல் இருந்து 1999 வரை கொசோவோ விடுதலைப் போர் உக்கிரமாக நடந்தது. அங்கிருந்து கொசோவோ

அர்பேனியர்கள் தொடர்ந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக 1.5 மில்லியன் மக்கள் கொசோவாவில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் 1999ல்

அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் தலைமையிலான நோட்டோ அமைப்பு செர்பியா மீது போரைத் தொடுத்தது. 79 நாட்கள் இடம்பெற்ற போருக்கு பின்னராக யுத்த நிறுத்தம் வந்தது.

ஐ.நாவின் தீர்மானம் 1854 சரத்துக்கு அமைய பொதுவாக்கெடுப்பு மூலம் கொசோவோ தனிநாடாகியது. அல்பேனியவர்கள் சுதந்திர

காற்றை சுவாசித்தார்கள் என அவர் தனதுரையில் தெரிவித்திருந்தார்.

கொசோவை மக்களது போராட்டமும், அப்போராட்டம் காரணமாக கொசோவா தனிநாடாக உருவான விதமும் எமது போராட்டத்துக்கும் , எமது அரசியல் குறிக்கோளுக்கும் உற்சாகம்

தருகின்றது என தெரிவித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கொசோவா மக்களது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க அங்கு நடந்த

பொதுவாக்கெடுப்பு பொறிமுறை போன்றே, எங்களுடைய ஈழத்தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்ற

பொறிமுறையாக பொதுவாக்கெடுப்பு கோரி போராடிவருகின்றோம் எனத் தெரிவித்தார்.

கொசோவாவில் நடந்தது ஒரு இனப்படுகொலை. அங்கு இனப்படுகொலை மீண்டு நடந்து விடக்கூடாதிருக்க சுதந்திரமும்

இறையும் கொண்டதாக ஈடுசெய் நீதியினை விளைவாக அங்கு பொதுவாக்கெடுப்பு நடந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

Leave a Reply