இந்த கயவர்களை கொல்லு

Spread the love

இந்த கயவர்களை கொல்லு

பட்டு சேலை விட்டு விடு
பாவம் அவரை வாழ விடு
உடல் ஒட்டு துணியை நீ கலைந்து
உறவு கொள்தல் பிழைதானே …

கட்டி தாலி நீ கட்டி
கண்ணா காமம் விளையாடு …..
கட்டா தாலி நீ பற்றின்
கயவன் உன்னை பந்தாடு ….

விழி முட்டி நீரை அவள் கொட்ட
விழுந்து விழுந்து நீ புசிப்பாய் ….
ஆடையில்லா உடல் ஒன்று
அவமான படுதல் மறந்தாயே ….

கடவுள் உன்னை ஏன் படைத்தான் ..?
கண்ணா கொஞ்சம் புரிந்து விடு …..
கருவறை தாங்கி உன்னை சுமந்தாள்
கண்ணா தாய் தெரிந்து விடு …

மனிதம் தொலைத்து வாழ்பவனே
மனிதம் இன்றேல் செத்து விடு …..
மனிதன் நீ என்றே சொல்லிவிடின்
மனிதரே கூடி இவன் தலை வெட்டு ….!

  • வன்னி மைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -21/08/2017
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply