இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தாக்குதல்
இன்று (18) இலங்கை சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி உள்ள கோத்தாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் ஒன்று கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் நடந்துள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்..