இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு
இந்தியா முஸ்லிம்கள் திடீர் சந்திப்பு ,இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இந்தியாவின் தூதருக்கு இடையில் திடீர் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இலங்கையில் புதிய ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற நிலையில் தற்பொழுது இந்தியாவின் தூதரகத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுடன் அவசர அவசர சந்திப்புகள் மற்றும் பேச்சுகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
ஜனாதிபதி அனுரகுமார குமர திசநாயக்கா இந்தியாவில் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட கூடியவர் என்பதால் அவரை சமாளிக்க முடியாத இக்கட்டான நிலையில் இந்தியா சிக்கித் தவித்து வருகின்றது.
அதனை அடுத்து இலங்கைக்குள் மிகப்பெரும் மக்கள் போராட்டங்களை நடத்தி அதனூடாக அழுத்தம் கொடுத்து ஆளுகின்ற அனுரா குமர ஆட்சியை கவிழ்த்து விடும் நடவடிக்கையில் இந்தியா திட்டம் தீட்டுவதாக இதன் ஊடாக அறிய முடிகின்றது.
மக்கள் ஆதரவற்ற கட்சிகளை மீள அழைத்து அதற்கு உயிர் கொடுக்க நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறதா என்கின்ற சந்தேகத்தை மேற்படி சந்திப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியில் அனுரா குமார திசநாயக்க ஆள முடியாது என்கின்ற நிலைப்பாடு இறுக்கமாக காணப்படுகின்றது.
மக்கள் மத்தியில் இவ்விதமான கருத்துக்கள் வேகமாக பரவி வருகின்றது.
அந்த கருத்துக்கள் உண்மைதான் என்பதைப் போல அவரது ஆட்சியை கவிழ்த்து அவருக்கு நெருக்கடியை கொடுக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது மேற்படி கட்சிகளுடான தூதரக சந்திப்புகள் எடுத்து காண்பிக்கின்றன.