இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர்

Spread the love
இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர்

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால், பாபி சிம்ஹா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கமல்ஹாசன்

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, கமலின் 60 ஆண்டுகால கலை பயணத்தை கவுரவிக்கும் வகையில் ‘உங்கள் நான்’ எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் போன்ற நேர்த்தியான நடிகரை நான் பார்த்ததில்லை, இந்த வயதிலும் அவர் ஆல்-ரவுண்டராக திகழ்வது ஆச்சர்யமாக இருக்கிறது என கூறிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டார்

Leave a Reply