இது தான் வாழ்வு புரிந்து விடு

Spread the love

இது தான் வாழ்வு புரிந்து விடு

தேடி தேடி பேச வந்தேன்
தேடா நீ நின்றாய் – இன்று
தேவை கூடி வரவோ என்னை
தேடி ஓடி வந்தாய் …?

மனதை உடைத்து வலிகள் தந்து
மாயம் மறைந்தாயே ..?- நீ
பறந்த பின்னே மனிதன் ஆனேன்
பாவை அறிவாயோ …..?

வலிகள் தந்த அவமானம்
வாழ்வு தந்ததடி- நான்
வளர உதவி புரிந்தாய்
உனக்கு மன்றில் நன்றியடி ….

சொத்து ,பத்து, இல்லை என்றே
சோடனை புரிந்தாயோ..? – இன்று
சோழ காற்றாய் நானும் வீச
சோகம் கொண்டாயோ …?

வலிகள் சூடி வழியில் விட்டே
வள்ளி நீ சென்றாய் – நிலை
மாற்றி நானும் வையம் நிமிர்ந்தேன்
மங்கை ஏன் வியந்தாய் ..?

பழகும் போதே ஒருவர் சிந்தை
பாதியில் அறிந்து விடு – அது
பாய போகும் ஏவுகணையா
பைந்தமிழ் பிடித்து விடு …..

இது தான் வாழ்வு புரிந்து விடு

உறவில் ஒன்று உணர மறந்தால்
உறவு நிலைக்காது ….
எதிர் காலம் ஒன்றை தொலைத்த வாழ்வின்
ஏக்கம் தணியாது …..

அழகை வைத்து ஆடி பார்த்தாய்
ஆட்டம் என்னாச்சு ..? – உந்தன்
அழகு செத்து உடலும் நலிய
அழுகிறாய் என்னாச்சு …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -01/01/2018

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply