இது தான் காதல்

இது தான் காதல்
Spread the love

இது தான் காதல்

எங்க ஊரு வீதியில
ஏ மனமே நடந்தேண்டி
உன் நினைவு எனை துரத்த
உட்க்கார்ந்து அழுதேண்டி

நீ தந்த உணவுகளும்
நீ யிட்ட முத்தங்களும்
நெஞ்சில் நீச்சலிட
நித்தம் உனை நினைக்கிறேன்

மடி சாய்ந்து நீ அழுதிட
மணி விரல்கள் தலை கோத
கண் துடைத்து நீயணைத்த
கால நினைவு துடிக்குதடி

போர் வந்து சதி செய்ய
போராலே பிரிந்தோமே
ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை பிரிவாய் நீ என்று

இன்றுவரை உறவில்லை
எங்கிருக்காய் தெரியவில்லை
ஆனாலும் ஆள் மனதில்
அன்பே உனை நினைக்கிறேன்

எனக்குள்ளே அழுது எனக்குள்ளே புலம்பி
என்னை நானே சமரசமாக்கி
உன் நினைவோடே வாழ்கிறேன்
உண்மை காதல் இது தானே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024