இதயம் உன்னை தேடுதே

இதயம் உன்னை தேடுதே
Spread the love

இதயம் உன்னை தேடுதே

உன்னை எண்ணி பார்க்கையில
உள்ளம் கலங்குமடி
ஊரின் வாசம் தேடையில
உன் நினைவு துரத்துமடி

சின்ன வயதில் நீ இருந்து
சீண்டிய நினைவு பொழியுமடி
அச்சம் இல்லா நீ பொழிந்த
அன்பை தேடுமடி

எதையும் அறியா எனை ஏற்ற
எண்ணம் பிடிக்குதடி – அதை
எண்ணி எண்ணி பார்க்கையில
என் மனம் வியக்குதடி

கள்ளம் இல்லா பேச்சழகும்
கனிந்த மொழி பண்பழகும்
இன்றும் நினைவில் இனிக்குதடி
இதயம் உன்னை தேடுதடி

தரிசா தரை கிடந்தாலும்
தாமரை குளம் போதுமடி
வருடம் பல ஆனாலும்
வளமாய் வயல் செழிக்குமடி

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

எமது வைபர் குழுவில் VIDEO காட்சிகள் பார்க்க விரும்புவார்கள் இணைக