இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
Spread the love

இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்

கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே

சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ

துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன

உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்

நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்

சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ

என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்

அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023

பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு