இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
Spread the love

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் இட்லி தோசை சப்பாத்தி பரோட்டா இவைகளுக்கு தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வைப்பது வழக்கம். இதை பிளைன் குருமா, பிளைன் சால்னா, எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம்.

சில ஹோட்டல்களில், ரோட்டு கடைகளில், இந்த குருமா ஸ்பெஷல் சுவையில் நமக்கு கிடைக்கும். ஆனால் அந்த குருமாவை அவர்கள் எப்படி வைக்கிறார்கள் என்ற சீக்ரெட் நமக்கு தெரியாது அல்லவா.

அந்த சீக்ரட்டை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரெசிபி தெரிந்தால் நீங்களும் மணக்க மணக்க ஒரே விசிலில் சூப்பராக பிளைன் குருமா வைக்கலாம்.

ஹோட்டல் ஸ்டைலில் பிளைன் தக்காளி குருமா செய்முறை: அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பிரியாணி – இலை 1, பட்டை – 1, கிராம்பு – 1, போட்டு தாளித்து நீலவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 போட்டு வதக்கி விடவும்.

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

வெங்காயம் சுருள சுருள நன்றாக பிரவுன் கலர் வரும் அளவுக்கு வதக்கி விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வெங்காயத்தை வதங்கவிட்டு விட்டு, மிக்ஸி ஜாரை எடுத்து இதற்குள் ஒரு மசாலா அரைக்கலாம்.

மிக்ஸி ஜாரில் சோம்பு – 3/4 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 10, கசகசா – 1/2 ஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் – 2, கிராம்பு – 1, தோல் சீவி நறுக்கிய சின்ன துண்டு – இஞ்சி, பூண்டு – 2 பல், தேங்காய் – 1/2 மூடி,

நன்றாக பழுத்த பெரிய தக்காளி பழம் – 2, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 5 பல், புதினா இலை – 5, மிளகாய் தூள் – 1 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன், போட்டு இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். (உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை கூட்டி போட்டுக் கொள்ளலாம்.) இதற்குள் குக்கரில் நாம் வெங்காயத்தை வதக்கி விட்டிருக்கிறோம் அல்லவா.

அதில் ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு, மீண்டும் ஒருமுறை வதக்கி இந்த மிக்ஸி ஜாரில் அரைத்திருக்கும் விழுதை அந்தகுக்கரில் ஊற்றி பச்சை வாடை போக வதக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் நாம் சேர்த்து அரைத்து இருக்கும் பொருட்கள் எல்லாமே பச்சையாக சேர்த்து அரைத்து இருக்கின்றோம்.

ஆகவே, இதனுடைய பச்சை வாசனை அனைத்தும் எண்ணெயில் வதக்கும்போது போக வேண்டும். அப்போதுதான் குருமா சுவைத்தரும்.

மூன்று நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, இந்த மசாலாவை வதக்குங்கள். பிறகு இந்த குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை தாராளமாக ஊற்றலாம்.

இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா

குருமா கொதித்து வரும்போது திக்காகும். தண்ணீர் ஊற்றி விட்டு தேவையான அளவு உப்பு தூள் தூவி, கொஞ்சமாக கொத்தமல்லி தழை தூவி, குக்கரை மூடி மிதமான தீயில் ஒரே ஒரு விசில் விட்டு எடுத்தால் போதும் சூப்பரான குருமா தயார்.

இறுதியாக இன்னும் கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி பரிமாறி பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும். இவ்வளவு தாங்க குருமா. இதை செய்யறதுல ஒரு கஷ்டமும் கிடையாது. உங்களுக்கு ரெசிபி பிடிச்சிருந்தா கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்கணும்.