இடிந்து விழுந்த வீடுகள்

இடிந்து விழுந்த வீடுகள்
Spread the love

இடிந்து விழுந்த வீடுகள்

நில நடுக்கம் இடிந்து விழுந்த வீடுகள் ,வவுனியாவில் கடந்த தினம் இடம்பெற்ற நில நடுக்கத்தின் பொழுது செட்டிகுளம் பகுதியில் வீடுகள் இரண்டாக பிளந்த நிலையில் காணப்படுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

காணப்பட்டதாக தெரிவித்துக் கொள்வது இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போது பெரும் சத்தம் கேட்டதாகவும் அதன் பொழுது தாங்கள் பார்த்தபோது வீடுகள் ஆடியதாக அதனை நேரில் உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர் .

நேரடியாக உரையாடுகின்ற பொழுது இந்த கருத்தினை அவர்கள் தெரிவித்திருக்கின்றனர் .

எதிர்பாராத இந்த நிலநடுக்கம் தமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகின்றனர் .

தொடர்ந்து நிலநடுக்கம் தாக்கினால் அது மிகப்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தும் என்கின்ற நிலையில் மக்களது கருத்துக்கள் அமையப்பெற்றுள்ளது .

இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது போன்ற மிகப்பெரும் சத்தம் கேட்டது பொழுது நிலங்கள் அதிர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வீடு ஒன்று இரண்டாக பிளந்த நிலையில் காணப்படுவதாக புதிய செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.