ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு
Spread the love

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு

ஆறுபேர் கைது துப்பாக்கிச் சூடு, அத்துருக்கிரியாவில் உள்ள வணிக கட்டிடத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பானவர்கள் என தெரிவித்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வணிக உரிமையாளர் மிகப் பெரும் செல்வாக்கு நிறைந்த ஒருவராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அரசியல்வாதிகளுடைய உறவினர்கள்

இவருடன் 72க்கு மேற்பட்ட அரசியல்வாதிகளுடைய உறவினர்கள் மனைவிகள் பிள்ளைகள் தொடர்பில் இருப்பதாகவும் எனவே இவர் அரசியல் சக்தி பலமிக்க ஒரு பிரபலமான வர்த்தகராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவரது கிளப்பிற்கு பலர் சென்று செல்வதாக ஒரு படியாகியுள்ளது .

அவ்வாறான நீண்ட நெடிய அரசியல் பின்புலத்தைக் கொண்ட ஒருவர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது பெரும் சந்தேகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

கைது செய்யப்பட்டவருக்கு உரிய தண்டனைகள் வழங்கப்படுமா என்ற கேள்வியைஎழுப்பப்பட்டுள்ளது .

அரசியல் பின்புலத்தில் செயல்படுகின்ற இருவராக காணப்படும் இவர் துப்பாக்கி சூடு சம்பவத்திலிருந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் விடுதலை பெற்று செல்ல கூடுமென மக்கள் பேசி வருகின்றனர் .

அதிகரித்து வருகின்ற படுகொலைகள்

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வருகின்ற படுகொலைகள் பின்னால் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக மக்கள் தமது சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட ஆறு பேரும் உரிய முறை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உரிய முறையில் தண்டனை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .