ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு
ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பில் கோட்டை புகையிரத நிலையம் உட்பட பல முக்கிய
இடங்களுக்குள் பிரவேசித்து அந்த இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடைவிதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த
ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது – நீதிமன்ற உத்தரவு
ஜயசிங்க, இலங்கை முற்போக்கு ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மயூர சேனாநாயக்க, அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யல்வல பன்னசேகர தேரர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .
அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கோட்டை பொலிஸ் பிரிவில் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து செராமிக் சந்தி, லோட்டஸ் வீதி, யோர்க் வீதி, வங்கி மாவத்தை, பரோன் ஜயதிலக மாவத்தை,
சைத்திய வீதி, ஜனாதிபதி மாவத்தை, காலி மவுத் சுற்றுவட்டம் மற்றும் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் காலி
முகத்திடல் ஆகிய இடங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.